Live : Pudukkottai Jallikattu : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு கோலாகலம்! - வன்னியன் விடுதி கிராம ஜல்லிக்கட்டு
🎬 Watch Now: Feature Video
Published : Jan 17, 2024, 8:08 AM IST
|Updated : Jan 17, 2024, 10:10 AM IST
வன்னியன் விடுதி : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி கிராமத்தில் அமைந்து உள்ள சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 17) காலை விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசையத்து துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வன்னியன் விடுதி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் இரண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவை காண பல்வேறு கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து பொது மக்கள் குவிந்து உள்ளனர்.