இது குறித்து ‘ஸ்லீப் மெடிசன் ரிவியூ’ (Sleep Medicine Review) என்ற ஆங்கிலப்பத்திரிகை நடத்திய ஆய்வில், "உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவோ 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெது வெதுப்பான வெந்நீரில் குளித்து விட்டுத் தூங்கினால் நல்ல, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லலாம்" எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ’ஸ்லீப் மெடிசன் ரிவியூ’ பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ’தூங்குவதில் பிரச்னையுள்ள 5,322 மனிதர்களை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தினோம். இதில், 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெது வெதுப்பான வெந்நீரில் குளித்தவர்கள் படுக்கையறைக்குச் சென்ற 10 நிமிடங்களிலேயே தூங்கத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் தூங்கி எழுந்தவுடன் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாகவும் கூறினார்கள்’ என்றார்.
அலுவலகத்தில் மன உளைச்சல், அன்றாட வேலைப்பளு, உடல் அசதி உள்ளிட்டவற்றால் நீங்கள் தூக்கத்தை தொலைத்துள்ளதாக உணர்ந்தால் தூங்கச் செல்லும்முன் வெந்நீரில் குளித்து முயற்சி செய்து பாருங்கள். அப்போது வரும் பாருங்கள் அருமையான தூக்கம்!