டெல்லி: சந்தையில் நடுத்தரம் முதல் ப்ரீமியம் பயனர்களை கவரும் வண்ணம் புதிய கைபேசிகளை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையச் சந்தையில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் சலுகைகளுடன் வெளியாகும் இந்தக் கைபேசிகளின் சிறப்பமசங்களைக் காணலாம்.
இந்தியாவில் அறிமுகமானது மோட்டோவின் முழு அளவு திரை 5ஜி மடக்கு கைபேசி!
கூகுள் பிக்ஸல் 5
- இரண்டு சிம் வசதி
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- 128 ஜி.பி., சேமிப்புத் திறன்
- யு.எஸ்.பி., டைப் சி இணைப்பு வசதி
- 5ஜி, 4ஜி இணைப்பு வசதி
- ஸ்டீரியோ ஒலிபெருக்கிகள்
- தெளிவான உரையாடல்களுக்கு மூன்று ஒலிவாங்கிகள் (மைக்ரோபோன்கள்)
- 4080 mAh மின்கலத்திறன் உடன் 18 வாட் அதி விரைவு மின்னூட்டும் வசதி
- 151 கிராம் எடை
- விலை : 51,400 ரூபாய் (உத்தேச விலை)
அதிரடி ஒலியமைப்புடன் வெளிவரும் புதிய நோக்கியா ஸ்மார்ட் தொலைக்காட்சிகள்!
கூகுள் பிக்ஸல் 4ஏ 5ஜி
- 6.2 அங்குல முழு எச்.டி., தொடுதிரை
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- குவால்காம் ஸ்நாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி.,
- 6 ஜி.பி., ரேம், 128 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்டுள்ளது.
- 4கே துல்லியத்தில் காணொலிகளைப் பதிவு செய்யும் வசதி
- இணைப்பற்ற மின்னூட்டும் திறன் (வயர்லெஸ் சார்ஜிங்)
- 18 வாட் அதிவிரைவு மின்னூட்டும் வசதி
- 3885mAh மின்கல திறன்
- 168 கிராம் எடை
- விலை: 31,999 ரூபாய் (பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் 29,999 ரூபாய்க்கு கிடைக்கும்)