டெல்லி: ஹூவாய் நிறுவனத்தின் கிளை அங்கமான ஹானர், தனது புதிய படைப்பான ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் வெளியிட தயாராகிவருகிறது.
இந்த டிவியானது 6 ஒலிவாங்கிகளை உள்ளடக்கி வெளியாகும் என சீனாவின் தகவல் தொழில்நுட்ப இணையதளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒலி வாங்கிகள் மூலம், தூரத்திலிருந்து குரல் எழுப்பி டிவியை பயனர்கள் ஏற்றவாறு கட்டுப்படுத்த முடியுமாம்.
மெசஞ்சர் ரூம் - சோதனை செய்கிறது வாட்ஸ் அப்... பயனர்கள் குதுகலம்!
இந்த டிவியானது எஸ்.ஆர் (சூப்பர் ரெசல்யூஷன்) தொழில்நுட்பத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தெளிவில்லாத படங்களை, செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்தி பயனர்களுக்குக் காட்சிப்படுத்தும்.
மே 18ஆம் தேதி, இந்த டிவியின் வெளியீடானது, யூ-டியூப் நேரலை நிகழ்வு மூலம் சந்தைக்கு அறிமுக்கப்படுத்துகிறது ஹானர். முன்னதாக ஹானர் 9எக்ஸ் திறன்பேசியை (ஸ்மார்டபோன்), கூகுள் ப்ளே ஆதரவில்லாமல், தனது சொந்த செயலி சந்தை அமைப்பைக் கொண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திறன்பேசியானது 7nm எனும் துல்லிய கிரின்810 செயற்கை நுண்ணறிவு சிப்செட் உடன் வெளியானது. இது கைப்பேசி சந்தையின் போட்டிக்கான நிகழ்கால தொழில்நுட்பம் என்பது கவனிக்கதக்கது.