ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி மூலம் அவரை எளிதில் தொடர்புகொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போன்று இல்லாமல், இது இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்துவருகிறது.
அப்டேட்டாக இருங்க
எழுத்து வடிவத்தில் மட்டுமின்றி புகைப்படம், காணொலி, குரல் பதிவு ஆகியவற்றின் மூலமும் வாட்ஸ்அப்பில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அணுகுவதற்கு எளிமையானதாக இருப்பதால்தான் பெரியோர் முதல் சிறியோர்வரை வாட்ஸ்அப்பை நாடிவருகின்றனர்.
குறிப்பாக, சிலருக்கு செல்போனில் டைப் செய்ய கடினமாக இருக்கும். நீண்ட பதிவை எழுதுவதற்குப் பதிலாக, தங்களது குரல்களிலேயே அந்தத் தகவலை அனுப்புவதைத்தான் பலரும் விரும்புகின்றனர்.
இனி திக்கலும் இல்லை... திணறலும் இல்லை
இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புள்ள நாடுகளில் பயனாளர்களின் தேவைகளுக்காக வாட்ஸ்அப் தனது செயல்பாட்டில் பல மாற்றங்களைச் செய்துவருகிறது. இந்நிலையில், தற்போதைய புதிய அப்பேட்டாக, வாட்ஸ்அப் குரல் பதிவு (Voice recording) முறையில் சில மாற்றத்தை கொண்டுவர உள்ளது.
தற்போது, ஒருவர் குரல் பதிவுசெய்கிறார் எனில் அவர் எந்த நிறுத்தமும் இல்லாமல் தொடர்ச்சியாகப் பேசிதான் பதிவுசெய்ய வேண்டும். குரல் பதிவு செய்வதற்கு இடையில், பேச வருவதை மறந்தாலோ அல்லது வேறு யாரும் இடைமறித்தாலோ உங்களால் பதிவை பாதியில் நிறுத்த முடியாது. எனவே, பலரும் குரல் பதிவு அனுப்பும்போது, பகுதி, பகுதியாகத்தான் அனுப்புகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்தச் சிரமத்தைப் போக்கும்வகையில், குரல் பதிவு சேவையில் நிறுத்தம்செய்யும் ஆப்ஷனை வாட்ஸ்அப் கொண்டுவர உள்ளது. இதனால், குரல் பதிவு செய்யும்போது, நீங்கள் நினைக்கும் நேரம் பதிவை நிறுத்திக்கொண்டு, பின்னர் மீண்டும் பதிவைத் தொடங்கலாம். இதன்மூலம், தங்களது குரல் பதிவை எந்த இடையூறும் இன்றி பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த மாற்றம் தற்போது சோதனையில் இருப்பதாகவும் விரைவில் இது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், குரல் பதிவுகளை வேகமாகவும் (1.5x), அதிவேகமாகவும் (2x) கேட்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் 20.7 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை!