உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பயனர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பாக தொடர்ந்து அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம், பயனர்கள் எளிதாக ஷாப்பிங் செய்யும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்த அப்டேட்டினை பயன்படுத்தி ஆன்லைன் விற்பனை செய்யும் வகையில் பிசினஸ் கணக்குகளை தொடங்க முடியும். அதேபோல் விற்பனையாளர்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருள்கள் பற்றி நுகர்வோருக்கு தெரிவிக்கலாம்.
இந்தப் புதிய அப்டேட்டில், ஷாப்பிங் பட்டன் வசதி அறிமுகமாகியுள்ளது. அது நாம் சேட் செய்யும் திரையின் வாய்ஸ் கால் ஆப்ஷனுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டனை நாம் அழுத்தும்போது, அந்த நிறுவனத்தின் பொருள்கள், விலை ஆகியவை பற்றிய முழுத் தகவல்களும் கிடைக்கும்.
இதனால் பயனர்களின் நேரம் அதிகளவில் மிச்சமாகும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்றவர்களுடன் சேட் செய்யும் போது ஷாப்பிங் பட்டன் திரையில் காட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் நாம் பொருள்களை கார்ட்டில் இணைக்கும் வசதி வரும் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயனர்கள் இந்த அப்டேட்டினை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்தாண்டு வள்ளல் பட்டத்தை தட்டிச் சென்ற விப்ரோ!