டெல்லி: துரித தகவல் பரிமாற்று செயலியான வாட்ஸ்அப், கோவிட்-19 காலங்களில் தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்க ‘தகவல்களை ஒரு முறை சோதித்து பகிரு’ எனும் பரப்புரையை தொடங்கியுள்ளது.
- இந்த பரப்புரை பயனர்களுக்கு பகிரும் செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள நினைவூட்டும்
இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்கள்! லாவா ரூ.800 கோடி முதலீடு செய்ய முடிவு!
- அரசு சார்ந்த வலைதளங்களை பயனர்களின் இருப்பிடம் கொண்டு அவர்களுக்கு பரிந்துரைக்கும்
- ஏப்ரல் மாதத்தில் ‘என் அரசாங்கம்’ (MyGov) இலவச அலைபேசி எண்ணை வாட்ஸ்அப் வெளியிட்டது
- கோவிட்-19 தொற்றுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளை பயனர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க வாட்ஸ்அப் முனைப்பு காட்டுகிறது
- இதுகுறித்த விளம்பரங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் மூலம் காண்பிக்கப்படும்.