வாட்ஸ்அப் செயலியில் குரூப் ஆரம்பிக்கும் பயனாளர்கள், சமூக ஊடகங்களில் அதன் லிங்கைப் பகிர வேண்டாம் என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய வாட்ஸ்அப் நிறுவன செய்தித் தொடர்பாளர், "மார்ச் மாதம் முதல் வாட்ஸ்அப் குரூப் லிங்கில் 'நோ இன்டக்ஸ்' என்ற டேக்கை வாட்ஸ்அப் இணைத்துவிட்டது. எனவே, கூகுளுடன் அதனை இணைக்க வேண்டாம். பயனாளர்கள் தனிப்பட்ட முறையில் தொடங்கிய குரூப் தகவலை, பொது ஊடகமான கூகுள் உள்ளிட்டவற்றில் பகிர்வது தவறானது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பொறியாளர் ஜென் யாங் என்பவர், 'chat.whatsapp.com' என்று கூகுளில் தேடுகையில் மொத்தமாக நான்கு லட்சத்து 70 ஆயிரம் இணைய முடிவுகள் வந்துள்ளன.
இது வாட்ஸ்அப் செயலியின் நம்பிக்கைத்தன்மையைப் பாதிப்பதாக எழுந்த புகாரையடுத்து, புதிய நோ இன்டக்ஸ் டேக்கை வாட்ஸ்அப் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.