ETV Bharat / lifestyle

பொக்கிஷமாகும் புகைப்படங்கள்! - இயற்கை புகைப்பட தினம் - The world's first photo

புகைப்படங்களைப் போன்றதொரு பொக்கிஷம் இந்த நூற்றாண்டில் உண்டா? வார்த்தைகளோ, சத்தமோ எதுவுமின்றி ஒளியைக் கொண்டு ஓராயிரம் விஷயங்களைக் கடத்தத் தெரியும் புகைப்படங்களுக்கு! இயற்கையை ஒளியால் மொழிப்பெயர்த்து எப்போதைக்குமாக சேமித்துத் தரும் இயற்கை புகைப்படங்களுக்கான தினம் இன்று.

இயற்கை புகைப்பட தினம்
இயற்கை புகைப்பட தினம்
author img

By

Published : Jun 15, 2021, 12:28 PM IST

கடந்த 13ஆம் நூற்றாண்டில் முதல் புகைப்படம் உருவானது. உலகிலேயே முதலில் எடுக்கப்பட்ட புகைப்படம் எட்டு மணி நேரத்திற்கு பிறகு மறைந்து போனது. அதன் பிறகு கண்ணாடி பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார் சர் ஜான் ஹெர்செல். இவரே ‘போட்டோகிராஃபி’ என்ற பெயரைத் தந்தவர்.

புகைப்படத்திற்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் 15ஆம் தேதி இயற்கை புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்
இறுக்கி முடித்த நாற்றுக்கட்டில் சுருங்கி கிடக்கிறது எண்ணிலடங்கா வயிறு

ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு ஒரு செய்தியை விளக்குவதைக் காட்டிலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீரியமான புகைப்படம் ஒன்று போதுமானது. மனிதர்களிடம் இருக்கும் மிகச் சிறந்த கலைகளுள் ஒன்று புகைப்படக் கலை.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே!
மாலைப் பொழுதின் மயக்கத்திலே!

பொதுவாக வன உயிர்களைக் காண வேண்டும் என்ற ஆசை மனிதர்களிடத்தில் பெருமளவில் ஊற்றெடுக்கும். அந்த ஆசை பலருக்குக் கைகூடுவதில்லை. ஆனால் புகைப்படக் கலைஞர்களுக்கு அது கண்கள் மேல் கேமரா தந்த வரம்.

கூன் விழுந்த இவளின் கதையில் நிமிர்ந்து நடக்கிறது ஒரு தலைமுறை

முக்கியமாகவனங்களையும் வன உயிர்களையும் அவர்கள் காண்பதில்லை, உணர்வார்கள். காண்பதற்கும் உணர்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களின் உணர்வு நமக்கு ஒரு காட்சி வழியான இயற்கையை கைவசப்படுத்தி அளிக்கிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்

இங்கு ஒரு மனிதனை சக மனிதன் கண்டுகொள்ளாமல், வாழ்வியலை மதிக்காமல் இருக்கும் சூழலில், இயற்கை புகைப்படக்காரர்கள் என்பவர்கள் ஒரு உயிரை மதித்து அதன் வாழ்வியலை பதிவு செய்பவர்கள்.

அவளை தேடி அணிலவன்
அண்ணாந்து பார்க்கும் அணிலவன்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை என்பதை முழுதாய் உணர்ந்தவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்! புகைப்படங்களின் மொழியை எந்த நாட்டினரும், இனத்தவரும், மொழியினரும் தடையின்றி அறிந்து கொள்வார்கள். இதனை நாம் சரியாகத் தந்திட தருணங்கள் அமைய வேண்டுமெனில் காத்திருப்பு கட்டாயம்.

இயற்கை புகைப்பட தினம்
கொக்கொக்க கூம்பும் பருவத்து

பல நாள்கள், பல நூறு மைல்கள் கடந்த பெரும் பயணத்தில் நமக்கான வினாடி எது என அறியாவிட்டாலும், அதற்குத் தயாராக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். புகைப்படங்களுக்குள் இருப்பது ஒரு நிகழ்வின் பிம்பம் மட்டுமல்ல, அது ஒரு அனுபவம்.

யாரோ ஒருவரின் பருக்கையில் இவள் மௌனமாய் பாடிக் கொண்டிருக்கிறாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.