ஆதம்பாக்கம் திருவள்ளுவர் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பொன்மணிச்செல்வன் (50). தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (21) தனியார் டுடோரியல் கல்லுாரியில் படித்துவந்தார்.
நேற்று மாலை, பெருங்களத்துாரில் உள்ள தனது நண்பரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற அபிஷேக், தாம்பரத்தையடுத்த இரும்புலியூர் அருகே வந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது, தனியார் பேருந்து மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து மீட்கப்பட்ட அவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அபிஷேக் உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் பேருந்து ஓட்டுநர் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் பணத்தைத் திரும்பக் கேட்டவர் குத்திக்கொலை