பஞ்சாப் மாநிலம், லூதியானாவைச் சேர்ந்த மெஹந்தி கலைஞர் ஒருவருக்கு கடந்த 18ஆம் தேதி போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், திருமணத்திற்கு மெஹந்தி போட வருமாறு அவரை அழைத்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண்ணும் பஞ்சாப் டாக்காவில் உள்ள மண்டியா கிராமத்திற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கே ஒரு பங்களாவிற்குச் சென்ற அந்தப் பெண்ணை ஐந்து நபர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து டாக்காவின் காவல் கண்காணிப்பாளர் குர்பன்ஸ் சிங் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் லூதியானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க...சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் : வைரல் காணொலி