திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (44). கணவரைப் பிரிந்த இவர், முகப்பேரில் உள்ள கன்னியாஸ்திரிகள் பெண்கள் விடுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தங்கி, சமையல் பணி செய்துவருகிறார். இவர் நாள்தோறும் விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று பூப்பறிப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை மொட்டை மாடிக்குச் சென்ற அந்தோணியம்மாள், அங்கிருந்த இரும்பு ஏணியின் மீது ஏறி பூப்பறித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தோணியம்மாள், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொலை