மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ரவி விஷ்வகர்மா. அரசியலுடன் சேர்த்து கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டுவரும் இவர், நேற்று (ஜூன் 26) தனது நண்பருடன் அருகில் உள்ள பகுதிக்குக் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காரை வழிமறித்த ஐந்து பேர் அவரின் நண்பரை மட்டும் காரிலிருந்து விரட்டியுள்ளனர்.
பின்பு, ரவியைக் காரைவிட்டு இறங்கவிடாமல் அவரையும் அவரது காரையும் சரமாரியாகத் தாக்கினர். பின்னர், துப்பாக்கியால் ரவியைச் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் அனைத்தும் மறுநாள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாக தொடங்கியுள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியின் காவல்த கண்காணிப்பாளர், 15 பேர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியுள்ளார்.
காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில், குற்றப்பின்னணி கொண்ட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சோகம்