ETV Bharat / jagte-raho

கரூரில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலரிடம் விசாரணை...!

கரூர்: வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் செந்தில்குமாரிடம், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

vigilance_checking
vigilance_checking
author img

By

Published : Feb 27, 2020, 12:18 PM IST

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் வாகன விபத்து தொடர்பாக, கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அவரது இன்னோவா காரை விடுவிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மறைந்திருந்தனர். அங்கு, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அபிஷேக் வழங்கியபோது, வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் செந்தில்குமார் கையும் களவுமாக பிடிபட்டார்.

vigilance_checking

அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தை பூட்டிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ. மரணம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.