ETV Bharat / jagte-raho

ரிசார்ட் உரிமையாளரிடம் மோசடி செய்த முக்கியக் குற்றவாளி கைது! - முக்கிய குற்றவாளி அனுப்குமார் கைது

கோயம்புத்தூர் : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே ரிசார்ட் உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

accuest arrest
accuest arrest
author img

By

Published : Sep 23, 2020, 1:58 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள கணபதி பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 67). இவர், வயது மூப்பு காரணமாக தனக்கு சொந்தமான ரிசார்ட்டை கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு நான்கு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தார்.

இதில் மூன்று கோடியே 36 லட்சம் ரூபாயை சிங்காநல்லூர் கிளை வங்கியில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், அதிலிருந்து ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 2ஆம் தேதி ஒரு வருட காலமாக தனது ரிசார்ட்டிற்கு வந்து செல்லும் அனுப்குமாரை எடுத்துவருமாறுகூறி அனுப்பியுள்ளார். ஆனால் அன்றிரவு நேரமாகிவிட்டதால், பணத்தை காலையில் கொண்டு வந்து தருவதாகக் கூறிவிட்டு சென்ற அனுப்குமார், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த முத்து, அனுப்க்குமார், டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வால்பாறை சரக துணைக் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த மோசடி கும்பலில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மோசடி கும்பலின் தலைவராக செயல்பட்ட அனுப்குமாரை காவல் துறையினர் நேற்று முன் தினம் (செப்.21) அன்று கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் கூறியதாவது, "ரிசார்ட் உரிமையாளர் முத்துவின் ஒரு கோடியே 67 லட்சம் ரூபாயை இந்த கும்பல் மோசடி செய்து அபகரித்துச் சென்றுள்ளது. இந்தக் கும்பலின் தலைவரான கேரளாவைச் சேர்ந்த அனுப்குமார், மோசடி பணத்தில் வாங்கிய சொகுசு காரில் ஆனைமலையை அடுத்த செம்மனாம்பதி பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. கருப்பசாமி பாண்டியன் காரை தடுத்து நிறுத்தியபோது, அனுப்குமார் துப்பாக்கியைக் காட்டி அவரை மிரட்டி, தப்பிச் சென்றார்.

கைப்பற்றப்பட்ட சொகுசு கார்
கைப்பற்றப்பட்ட சொகுசு கார்

அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் துரத்திச் சென்று அனுப்குமாரை பிடித்தனர். இந்தக் கும்பலிடமிருந்து இதுவரை 40 லட்சம் ரூபாய் ரொக்கம், நான்கு சொகுசுக் கார்கள், 50 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன்கள், மூன்று தோட்டாக்களுடன் ஒரு நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனுப்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

மேலும், இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன. இது குறித்தும் விசாரணை நடத்தவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 'ஆக்ஸிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.