தெலங்கானா மாநிலம் ஹாச்பூரில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 25ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் துறையினர் அந்தச் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் சிறுமியின் உடல் அந்த கிராமத்திற்கு அருகேயுள்ள ஒரு கிணற்றில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்தக் கிணற்றில் இறங்கி பார்த்த பொழுது பல மர்மங்கள் வெளியானது. அந்தக் கிணற்றில், இந்த சிறுமியின் உடல் உட்பட மொத்தம் மூன்று சிறுமிகளின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விசாரணை நடத்தியதில், மூன்று சிறுமிகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. ஸ்ரீனிவாசா ரெட்டி என்பவர்தான் இக்கொடூரத்தை செய்தார் என்பது முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.