ETV Bharat / jagte-raho

சொத்துக்காக அக்கா, அவரது குழந்தையை கொடூரமாக கொலை செய்த தங்கை கைது!

author img

By

Published : Nov 4, 2020, 7:11 PM IST

கள்ளக்குறிச்சி: அசகளத்தூரில் சொத்துக்காக அக்கா மற்றும் அவரது ஒரு வயது குழந்தையை அரிவாளால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டுள்ளார்.

sister_murder
sister_murder

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சுமதி, சுஜாதா என்ற மகள்கள் இருந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், இளைய மகள் சுஜாதா பிரசவத்துக்காக அப்பா சின்னசாமி வீட்டில் தங்கியிருந்தார். மூன்று மாதங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே, சின்னசேலம் அருகே திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டில் வசித்து வந்த சின்னசாமியின் மூத்த மகள் சுமதி, தனது ஒரு வயது மகள் ஸ்ரீ நிதியுடன் தந்தை சின்னசாமி வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்தார். கூலி வேலைக்காக சின்னசாமி பெங்களூரு சென்ற நிலையில், தாய் மயிலு வயல் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் சகோதரிகள் இருவரும் தங்கள் குழந்தைகளோடு இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் தீயில் எரிந்த நிலையில் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாண கோலத்தில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்தம் கொட்டியவாறு அலறி துடித்த சுமதி, வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். அதே வேளையில் சுமதியின் குழந்தை ஸ்ரீ நீதியும் தீயில் எரிக்கப்பட்டு தீக்காயங்களுடன் அலறித் துடித்தது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், நேற்று (நவம்பர் 4) இரவு சுமதி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குழந்தை ஸ்ரீநிதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்ட நிலையில், சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து பெங்களூருவில் இருந்து வந்த சின்னசாமி, தனது மகள் சுமதிக்கு பேய் பிடித்ததால் தன்னைத்தானே அரிவாளால் வெட்டிக் கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் என்று வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், குழந்தை ஸ்ரீநீதியின் சடலத்தை சாலையில் வைத்து கணவர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், சுமதி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் சம்வத்தன்று தங்கை சுஜாதாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சுமதியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறினார். இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 20 சென்ட் நிலம் சின்னசாமி வாங்கியுள்ளதாகவும் அதை பெறுவதில் சகோதரிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், சுமதியையும் அவரது குழந்தையையும் அரிவாளால் வெட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சுஜாதா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வரஞ்சரம் காவல்துறையினர் சுஜாதாவை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.