ETV Bharat / jagte-raho

குழந்தை திருமணம் - ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை

சேலம்: திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

child marriage
author img

By

Published : Sep 2, 2019, 11:50 AM IST

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகே உள்ள மூணாம் கரடு பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன், கந்தம்மாள் தம்பதி. இவர்களுக்கு மோனிஷா என்ற 17 வயது மகள் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், மாணவியின் தந்தை முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மோனிஷாவிற்கு திருமணம் செய்ய அவரது தாயார், உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். திருமணம் குறித்து பெற்றோர்கள் மோனிஷாவிடம் தெரிவித்தபோது தான் தொடர்ந்து படிக்க ஆசைப்படுவதாகவும் தற்போது திருமணத்திற்கு அவசியமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை.  திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தல்  சேலம்  அன்னதானப்பட்டி  salem  school girl suicide  parents forcing marriage  annathanapatti
தற்கொலை செய்துகொண்ட மாணவி மோனிஷா

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் வற்புறுத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி மோனிஷா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் குமார், காவலர்கள் மோனிஷாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கட்டாய திருமண முயற்சியால் மனமுடைந்த மாணவி தற்கொலை
இது தொடர்பாக காவல்துறையினர் மாணவியின் பெற்றோர், உறவினர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருமணம் செய்ய மறுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை .
பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை .Body:

சேலத்தில் திருமணம் செய்ய மறுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள மூணாம் கரடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மனைவி கந்தம்மாள் .இவர்களுக்கு மோனிஷா என்ற 17 வயதில் மகள் உள்ளார்.

மோனிஷா சேலம் மூங்கப்பாடி பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவியின் தந்தை முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மோனிசாவிற்கு திருமணம் செய்ய அவரது தாயார் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர் .

இது தொடர்பாக ஞாயிறு காலை பெற்றோர்
மோனிசாவிடம் தெரிவித்தனர் .
அப்போது மோனிஷா தான் தொடர்ந்து படிக்க வேண்டும் .திருமணம் வேண்டாம் என தெரிவித்தார்.

ஆனால் பெற்றோர் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தினர்.
இதனால் வெறுப்படைந்த மோனிஷா துப்பட்டாவால் தூக்கிட்டு ஞாயிறு மாலை தற்கொலை செய்து கொண்டார் .

இதை அறிந்த பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதன் பெயரில் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் மோனிஷாவின் சடலத்தை கைப்பற்றி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சேலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.