ETV Bharat / jagte-raho

சாய்பாபா கோயில் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை: கோயில் அலுவலகப் பூட்டை உடைத்து ஆறு லட்ச ரூபாய், மடிக்கணினி கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

theft
theft
author img

By

Published : Sep 25, 2020, 3:39 PM IST

அரும்பாக்கம் மேற்கு கல்லூரி சாலைப் பகுதியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை செனாய் நகரைச் சேர்ந்த மோகன் (45) என்பவர் நிர்வகித்துவருகிறார்.

இவர் நேற்று இரவு வழக்கம்போல் கோயில், அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, இன்று காலை கோயிலை திறக்கவந்துள்ளார். அப்போது, கோயில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்த மோகன், உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்களில் இருந்த ஆறு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய், மடிக்கணினி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

பின்னர், உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். அதனடிப்படையில் கோயிலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் கொள்ளையரைத் தேடிவருகின்றனர்.

சாய்பாபா கோயில் பூட்டை உடைத்து திருட்டு

இதையும் படிங்க: முதியவர்களை குறிவைத்து நூதன கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.