திருச்சி விமான நிலைத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ஷேக் நசுருதீன் என்பவர் 199.5 கிராம் எடை கொண்ட 5 தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு 7.47 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க:
மறைத்து வைக்கப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!