ETV Bharat / jagte-raho

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உறவினர் வீட்டில் நகை திருட்டு - காவலாளி கைது! - பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உறவினர் வீட்டில் நகை திருட்டு

சென்னை: பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் உறவினர் வீட்டில் 10 சவரன் நகை காணாமல் போன சம்பவத்தில், குடியிருப்பின் காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உறவினர் வீட்டில் நகை திருட்டு: காவலாளி கைது!
author img

By

Published : Nov 20, 2019, 7:23 PM IST

சென்னையில் பல இடங்களில் கிளை நிறுவனங்களை கொண்டுள்ள பிரபல ஜவுளிக்கடை நிறுவன உரிமையாளரின் உறவினர் சிவா. இவர் அபிராமபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் சிவாவின் மனைவி தர்ஷினி, வீட்டில் கழட்டி வைத்திருந்த 10 சவரன் மதிப்புள்ள தாலி செயின் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து தர்ஷினியின் கணவர் சிவா(30) அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள காவலாளி அந்த நகையை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. விசாரணையில் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜிப் லிங்கா(25) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உறவினர் வீட்டில் நகை திருட்டு: காவலாளி கைது!

இந்நிலையில் விடுப்பு முடிந்து திரும்பிய அவரை அபிராமபுரம் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அதே வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் காவலாளி ராஜிப் லிங்காதான் நகையை திருடியுள்ளார் என்பதும், அதே அடுக்குமாடி குடியிருப்பில் பலரது வீட்டிலும் அவர் கைவரிசையை காட்டியுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து காவலாளி லிங்காவை கைது செய்த காவல்துறையினர், நகையை மீட்க தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:Body:*சென்னை - பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் உறவினர் வீட்டில் நகை திருட்டு, காவலாளி கைது*

சென்னையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் உறவினர் வீட்டில் 10 சவரன் நகை காணாமல் போன சம்பவத்தில் குடியிருப்பின் காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் கிளை நிறுவனங்களை கொண்டுள்ள பிரபல ஜவுளிக்கடை (போத்தீஸ்) நிறுவன உரிமையாளரின் உறவினர் சிவா. இவர் அபிராமபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சிவாவின் மனைவி தர்ஷினி வீட்டில் கழட்டி வைத்திருந்த 10 சவரன் மதிப்புள்ள தாலி செயின் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து தர்ஷினியின் கணவர் சிவா(30) அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள காவலாளி அந்த நகையை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. விசாரணையில் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜிப் லிங்கா(25) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில் விடுப்பு முடிந்து திரும்பிய அவரை அபிராமபுரம் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அதே வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் காவலாளி ராஜிப் லிங்காதான் நகையை திருடியுள்ளார் என்பதும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் பலரது வீட்டிலும் அவர் கைவரிசை காட்டியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நகையை மீட்க தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.