திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மேகா என்ற ஸ்டுடியோ நடத்திவந்தவர் தினேஷ். இவரது மனைவி அனிதா. காதல் திருணம் செய்துகொண்ட இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த 3 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) பிற்பகல் 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தினேஷை சரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து 4 பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து தலைமறைவாகினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் தினேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தினேஷுக்கும் அவரது மனைவி அனிதாவுக்கும் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்துவருவதால் மனைவி தரப்பில் இந்த கொலை நடந்ததா அல்லது தினேஷுக்கும் வேறு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது மனைவிக்கு தெரியவந்ததால் அந்தத் பெண் தரப்பில் இருந்து யாரேனும் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்று பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஸ்டுடியோவிற்குள் புகுந்து போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை
திருவள்ளூர்: காக்களூரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து புகைப்படக் கலைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.