தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் தொழிலாளர் வாரியத்தில் துணை ஆணையராகப் பதவி வகித்தவர் ஆனந்த் ரெட்டி.
இவரை கடந்த 7ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இந்த நிலையில் ஆனந்தின் உடலை பூபாலப்பள்ளி பகுதியில் காவலர்கள் கைப்பற்றினர். அவரின் உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைதுசெய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நண்பர்களுடன் இணைந்து ஆனந்த் ரெட்டியை கொலைசெய்தததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைதுசெய்த காவலர்கள், தலைமறைவாகவுள்ள அவரது நண்பர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
இருதரப்புக்குமிடையே நடந்த பணத்தகராறில் ஆனந்த் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பற்றி காவலர்கள் விரிவான விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'எங்களைச் சீண்டுவதை விட்டுவிட்டு மக்களை கவனியுங்கள்' - மோடிக்கு ராகுல் அறிவுரை