ETV Bharat / jagte-raho

பேச மறுத்ததால் ஆத்திரம்: மாணவியை தாக்கிய மாணவர் - கல்லூரி மாணவி மீது தாக்குதல்

சென்னை: நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

attacked
attacked
author img

By

Published : Feb 8, 2020, 7:01 PM IST

நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில், நேற்று அனைத்து கல்லூரிகள் பங்குபெறும் கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம், மாணவர் ஒருவர் வந்து கல்லூரி நிகழ்ச்சி குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பேச மறுத்த மாணவியை, அந்த மாணவர் திடீரென தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, நடந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மாணவியை தாக்கிய அந்த மாணவர், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தேவேந்திரன் (20) என்பது தெரியவந்தது.

மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வரும் தேவேந்திரனை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

Intro:Body:நுங்கம்பாக்கத்தில்
கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் கைது.

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பெண்கள் கல்லூரியில் நேற்று கல்ச்சுரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கல்ச்சுரல் விழாவிற்கு அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மற்ற கல்லூரியிலிருந்து மாணவர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.

அங்கு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி வித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பங்கேற்றார்.
அவரிடம் மாணவர் ஒருவர் வந்து கல்லூரி நிகழ்ச்சி குறித்தும் அவரை பற்றியும் விசாரித்ததாக கூறப்படுகிறது.

அப்போது பேச மறுத்த வித்யாவை அந்த மாணவர் திடீரென தாக்கிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சிறிது நேரத்தில் தப்பிவிட்டார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார்
கல்லூரி மாணவியை தாக்கிய அந்த மாணவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த தேவேந்திரன்(20) என்ற மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.