கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை தமிழ் பட்டப்படிப்பு படித்துவருபவர் விக்னேஷ். இதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவர்களான சிவசக்தியும், நந்தகுமாரும் தொடர்ச்சியாக, விக்னேஷை ”விக்னேஸ்வரி விக்னேஸ்வரி” என அழைத்து ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த விக்னேஷ் நஞ்சுண்டார். இதையறிந்த கல்லூரி நண்பர்கள், விக்னேஷை மீட்டு, மருத்துவச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்து தாந்தோணி காவல் துறையினர், சம்பந்தப்பட்ட இருவர் மீது ராகிங் செய்ததாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.