கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரபி பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பும்போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவனைக் கடத்த முயற்சித்துள்ளனர். சிறுவனை காரில் ஏற்றும்போது அவன் கூச்சலிட்டதால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை, கேரள மாநிலம் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் களியக்காவிளை காவல் துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்க: