திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அமைந்துள்ள வானக்காரகொல்லையைச் சேர்ந்தவர் இர்பான் அகமது. இவர் கடந்த 30ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்ற சில மணி நேரங்களில் வாகனம் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இர்பான் காணாமல்போன தனது இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், இருசக்கர வாகனம் திருடு போன பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, இர்பான் அகமது வீட்டிற்கு எதிரில் நீல நிறச் சட்டை அணிந்த ஒருவர் நீண்ட நேரமாக நோட்டமிட்டு ,ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்நபரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்ற நடவடிக்கை' - ஐஜி சங்கர்