ETV Bharat / jagte-raho

குண்டு வீசி கொடூரமான முறையில் இரட்டை கொலை..! - போலீசார் விசாரணை

திருநெல்வேலி: நாங்குநேரி மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சாந்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் ஆகியோரை 10 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Sep 26, 2020, 4:33 PM IST

Updated : Sep 26, 2020, 10:03 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் நம்பிராஜன். இவர் அதே ஊரைச் சேர்ந்த தங்க பாண்டியன் என்பவரின் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காதல் திருமணத்தால் அருணாச்சலம் குடும்பத்திற்கும், தங்கபாண்டியன் குடும்பத்திற்குமிடையே ஏற்பட்ட பிரச்னை விரோதமாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நம்பிராஜன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி அவரது உறவினர்கள் முருகன் செல்லத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நம்பிராஜன் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் நாங்குநேரியில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் நம்பிராஜன் சகோதரர் ராமையா, தாய் சண்முகத்தாய் மற்றும் இசக்கி, சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் அனைவரும் பிணையில் வந்திருந்தனர். ராமையாவும், சங்கர், இசக்கி, சுப்பையா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தனர். அருணாச்சலம், அவரது மனைவி சண்முகத்தாய் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.

வெடிகுண்டு வீசப்பட்ட வீடு
வெடிகுண்டு வீசப்பட்ட வீடு

அதே பகுதியில் வசித்து சுப்பையாவும் வசித்து வரும் நிலையில் சாந்தி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, 5 இருசக்கர வாகனங்களில் அருணாச்சலம் மற்றும் சுப்பையாவை தேடி வந்த கும்பல் சாந்தி வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசி கலவரத்தை ஏற்படுத்தி, அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் தனது வீட்டிற்குள் வருவதையறிந்த அருணாச்சலம் அவரது மனைவி சண்முகத்தாய் வீட்டின் பின்புறம் சென்று தப்பியோட முயற்சித்தபோது சண்முகத்தாய் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார்.

கதறி அழுகும் சாந்தி மகள்
கதறி அழுகும் சாந்தி மகள்

சண்முகத்தாயை கழுத்தறுத்து கொலை செய்ததோடு அவரது தலையை அரிவாளால் வெட்டி எடுத்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அந்த கும்பல் வீசி சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.

இருவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே உயிரிழந்த ஆறுமுகம் மற்றும் சுரேஷ் குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். விரைவில் இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுகால்குறிச்சி இரட்டை கொலை சம்பவத்தால் பதற்றம் நீடிப்பதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதல் பிரச்னையில் தொடங்கிய கொலைவெறி, தீராத பகையாக மாறி 5 பேர் கொலை செய்யப்படும் அளவுக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எஸ்.பி.பி.யின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Last Updated : Sep 26, 2020, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.