ETV Bharat / international

மெட்டாவை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ள ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை வைத்திருக்கும் மெட்டா நிறுவனத்தை 'பயங்கரவாத' அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் அதிரடி காட்டியுள்ளது.

Russia adds Meta to list of 'terrorist and extremist' organisations, reports AFP News Agency.

author img

By

Published : Oct 12, 2022, 8:10 AM IST

மாஸ்கோ(ரஷ்யா): ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ((Federal Service for Financial Monitoring (Rosfinmonitoring)) தனது தரவு தளத்தில் தொகுக்கப்பட்ட "பயங்கரவாத" அமைப்புகளின் பட்டியலில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை இயக்கி வரும் நிறுவனமான மெட்டா நிறுவனத்தைச்சேர்த்துள்ளது. இதன்மூலம் மெட்டா ரஷ்யாவால் பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக மார்ச் மாதம், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ பரப்புரையின்போது மெட்டா, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக்கூறி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை ரஷ்யாவில் தடை செய்தது.

உக்ரைன் போரின் தொடக்க கட்டத்தில் சிலர் பதிவிட்ட ரஷ்ய படையெடுப்பாளர்களுக்கு மரணம் என்று பதிவிட்ட செய்திகளையும், குடிமக்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்றும் பரப்பியதை, மெட்டா அதிகம் பகிர்ந்துகொண்டு இருந்தது. இதனால் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டன. இருப்பினும் சிலர் VPN சேவைகள் மூலம் அதனைப்பெற்றனர்.

மெட்டா குறித்த ரஷ்யாவின் பார்வை என்ன?: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, மெட்டா நிறுவனம், தவறான தகவல்களைப்பரப்பும் ரஷ்யாவின் செய்திக்குழுமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தது. அதில் முக்கியமாக ஐரோப்பியாவின் செய்தி தளங்களைப்போல் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

அந்த இணையதளத்தில் செய்திகளுக்குப் பதிலாக, உக்ரைனுக்கும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் பரப்புரை இருந்ததாக மெட்டா கூறியது. போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவில் தோன்றிய மிகப்பெரிய நடவடிக்கை இது என்று மத்தியஸ்தர்கள் அதனைக்கருதினர்.

இது குறித்து அட்லாண்டிக் கவுன்சிலின் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் அறிக்கையின்படி, "இந்த போலி செய்தி இணையதளக் குழுவினர், உக்ரைனுக்கு எதிராகவும், ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், ஐரோப்பிய நாடுகளை குறிவைத்தும் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளனர்’ எனத்தெரிவித்துள்ளது. இச்செயல், மெட்டா நிறுவனத்தின் முயற்சியால் பொதுவெளியில் வெளிக்கொண்டுவரப்பட்டது.

ரஷ்யாவில் உருவான இந்த போலியான தகவல்களை பரப்பும் தளங்கள், நூற்றுக்கணக்கான போலியான சமூக ஊடக கணக்குகள் மற்றும் டஜன் கணக்கான போலி செய்திகளை, உக்ரைனுக்கு எதிராக பரப்ப முயன்றது. இதனைக்கண்டறிந்த மெட்டா நிறுவனம், இந்த போலி செய்திகளைப் பரப்பும் முயற்சியை முறியடித்தது. ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, இத்தகைய செயல்பாடுகள் எதிரிகளுக்கு எதிரான ரஷ்யாவின் சிக்கலான பரப்புரை முயற்சி என ஃபேஸ்புக் நிறுவனம் கருத்துரைத்துள்ளது.

இத்தகைய தவறான செய்திகளைப்பரப்பும் நோக்கில், 60க்கும் மேற்பட்ட இணையதளங்கள் ஈடுபட்டன. குறிப்பாக, ஐக்கிய ராச்சியத்தின் தி கார்டியன் செய்தித்தாள் போன்றும், ஜெர்மனியின், டெர் ஸ்பீகல் ஊடகத்தைப்போன்றும் போலியாக வடிவமைக்கப்பட்டு செய்தி பரப்பப்பட்டது. அதேபோல், 1600க்கும் அதிகமான போலி ஃபேஸ்புக் கணக்குகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், உக்ரைன் பற்றி தவறான சித்தரிப்புகளையும் கொண்ட செய்திகளைப் பரப்ப பயன்படுத்தப்பட்டன.

இத்தகைய காரணங்களை மறைமுகமாக வைத்துக்கொண்டு, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை வைத்திருக்கும் மெட்டா நிறுவனத்தை 'பயங்கரவாத' அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கிரீஸ் நாட்டில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சேதம் ஏதுமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.