பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இந்துக்கள், சிறுபான்மையினர் என்பதால், இந்து கோயில்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், கோத்ரியில் ஒரு புகழ்பெற்ற இந்து கோயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஶ்ரீமாரி மாதா கோயில் மீது அடையாளம்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலில் இருந்த பூசாரியினையும், நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த இந்து தெய்வங்களின் சிலைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியதாகவும், அவர்கள் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்கள்? என்று தெரியவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள இந்துக்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: தன் முன்னாள் மனைவி ஏஞ்சலினா ஜோலி மீது நடிகர் பிராட் பிட் தொடர்ந்த வழக்கு!