ETV Bharat / international

பாகிஸ்தானில் பேருந்து விபத்து - 15 பேர் பலி!

திருமண கோஷ்டி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் சடலத்தை மீட்பு படையினர் மீட்டனர்.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து
author img

By

Published : Feb 20, 2023, 2:35 PM IST

லாஹூர்: பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் நடந்த திருமண விழாவில் கலந்த கொண்டவர்கள்ம், அங்கிருந்து லாஹூருக்கு பேருந்து மூலம் பயணித்து உள்ளனர்.

கல்லர் கஹர் பகுதியில் சென்று கொண்டு இருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து, கவிழ்ந்து எதிர்திசையில் சென்று கொண்டு இருந்த 3 வாகனங்கள் மீது மோதி, பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்து விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பள்ளத்தாக்கில் கிடந்த பேருந்தை வெட்டிய மீட்பு படையினர் பேருந்தினுள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 11 பேர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீட்கப்பட்டவர்கள் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பேர் கவலைக் கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் உயர்ரக சிகிச்சை அளிக்கக் கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவர்களின் 6 பெண்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் கூறினர். அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பது பாகிஸ்தானின் சாதரணமாக கருதப்படும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 41 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும், 2018ஆம் ஆண்டு 27 ஆயிரம் பேர் இறந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.