ETV Bharat / international

கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா.. 2,270 விமான சேவை ரத்து.. - flights cancelled in US

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால் 2,270 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா: 2,270 விமான சேவை ரத்து

author img

By

Published : Dec 23, 2022, 10:05 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (டிச.25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் நேற்று (டிச.22) மாலை 6 மணி நிலவரப்படி 2,270 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு தளமான FlightAware தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 23) 1,000 விமான சேவைகளும், நாளை (டிச.24) 85 விமானங்களும் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டுவிட்டன.

கடும் குளிரில் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, சிகாகோவின் ஓ ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் -13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சவூதி அரேபியாவில் தேர்வு அறைகளில் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.