கான்பெரா: ஆஸ்திரேலியா நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் சிட்னி, நியூகாஸ்டில், கான்பெரா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கடைகள் மூழ்கியுள்ளன.
குறிப்பாக சிட்னியின் வாரகம்பா அணை விரைவாக நிரம்பிவருவதால், அதிகப்படியான தண்ணீரை திறந்துவிட நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சிட்னி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தப்படி முகாம்களை நோக்கி படையெடுத்துவருகின்றனர். இதனிடையே 500-க்கும் மேற்பட்ட மீட்புக்குழு அலுவலர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிட்னியின் பல இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 200 மிமீ முதல் 300 மிமீ வரை கனமழை பதிவாகியுள்ளது. கடலோரங்களில் 90 கிமீ வேகத்தில் காற்று வீசி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு