ETV Bharat / international

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் சிரப் குடித்து 18 குழந்தைகள் பலி: இந்தியாவின் பதில் என்ன?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்பை குடித்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனம், பாஜக, காங்கிரஸ் மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியவற்றைக் காணலாம்.

இந்திய இருமல் சிரப் விவகாரம்: உஜ்பெகிஸ்தான் அரசுக்கு இந்தியாவின் பதில் என்ன?

author img

By

Published : Dec 29, 2022, 6:15 PM IST

டெல்லி: இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் Doc-1 Max என்ற மருந்தை, இருமலுக்காக 21 குழந்தைகள் குடித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மூச்சுத்திணறல் காரணமாக உஸ்பெகிஸ்தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் அல்லது உள்ளூர் மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு, உரிய மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த Doc-1 Max மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அக்குழந்தைகள் 2 முதல் 7 நாள்கள் வரை தினமும் 3 முறை 2.5 மில்லி முதல் 5 மில்லி வரை குடித்துள்ளனர். அதேநேரம் இவை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கக் கூடும். மேலும், இந்த மருந்துகளை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், அதில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை பொருள் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உஸ்பெகிஸ்தான் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து Doc-1 Max மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த 4 இருமல் சிரப்களை குடித்த 66க்கும் மேற்பட்ட காம்பியா நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மரியோன் பயோடெக் நிறுவன சட்டத் தலைவர் ஹசன் ராசா கூறுகையில், “குழந்தைகளின் இறப்புகளுக்கு வருந்துகிறோம். குறிப்பிட்ட Doc-1 Max சிரப்பின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் வழங்கியுள்ள விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்போம். மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் அலுவலர் ஒருவர் கூறுகையில், “இந்திய இருமல் சிரப்பை குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகளின் இறப்பு குறித்து மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) விசாரணை நடத்தும். உஸ்பெகிஸ்தானில் உள்ள சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு, இதுதொடர்பான விசாரணைக்கு உதவ உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் கொடியதாக உள்ளது. முதலில் காம்பியாவில் 70 குழந்தைகள் இறந்தனர். இப்போது உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மோடி சர்க்கார், இந்தியாவை உலகிற்கு மருந்தகம் என்று பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் இணைச் செயலாளர் அமித் மால்வியா, “காம்பியாவில் குழந்தைகள் இறந்ததற்கும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை காம்பியாவின் அலுவலர்கள் மற்றும் DCGI (இந்திய பொது மருந்து கட்டுப்பாடு) இருவரும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால், மோடி மீதான வெறுப்பில் கண்மூடித்தனமான காங்கிரஸ், இந்தியாவையும் அதன் தொழில்முனைவோர் உணர்வையும் தொடர்ந்து கேலி செய்கிறது. இது வெட்கக்கேடானது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், “உயிரிழந்த குழந்தைகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி Doc-1 Max சிரப் பெற்றொர்களால் வழங்கப்பட்டுள்ளது. பெற்றொர்கள் மருந்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, குழந்தைகளின் நிலை மோசமடைந்து வந்துள்ளது” என்றனர்.

இதனிடையே மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியோன் பயோடெக் தயாரித்த அசுத்தமான இருமல் சிரப் குறித்தும் உஸ்பெகிஸ்தானில் இருந்து வரும் அறிக்கைகள் குறித்தும், மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு, உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்து கட்டுப்பாட்டாளருடன் டிசம்பர் 27 முதல் வழக்கமான தொடர்பில் உள்ளது.

இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே, மரியோன் பயோடெக் நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை உத்தரப்பிரதேச மருந்துக் கட்டுப்பாடு மற்றும் மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு குழுவினர் (DCGI) இணைந்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருமல் சிரப்பின் மாதிரிகள் உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சீனாவில் லட்சக்கணக்கில் கரோனா பாதிப்புகள் - திணறும் மருத்துவமனைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.