பீஜிங் (சீனா): சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக 3 வீரர்களை அனுப்பியது. செவ்வாய் இரவு ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2எஃப் ராக்கெட்டில் ஷென்ஜோ-15 விண்கலம் மூலம் 3 வீரர்களை சீனா அனுப்பியது. அந்த விண்கலம் 6 1/2 மணி நேரத்திற்குப் பிறகு, புதன்கிழமை காலை 5:42 மணிக்கு தியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
ஷென்ஜோ-15 விண்கலத்தில் சென்ற வீரர்கள், தியாங்காங் விண்வெளிநிலையத்தில் ஏற்கனவே உள்ள வீரர்களுடன் சிறுது நாட்கள் பணியாற்றுவார்கள். பின் அவர்கள் ஆறு மாத பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்புவார்கள்.
சீனா கட்டமைத்துவரும் இந்த விண்வெளி நிலையம் தற்போது அதன் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. மூன்று தொகுதிகள் மற்றும் மூன்று விண்கலங்கள் மூலம் மொத்தம் கிட்டத்தட்ட 100 டன் எடை விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது தியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆறு விண்வெளி வீரர்களுக்கு இடமளிக்க முடியும்.
இதையும் படிங்க: இயற்கை எரிவாயு திரவம்... ஜெர்மனி-கத்தார் இடையே ஒப்பந்தம்...