ETV Bharat / international

துபாயின் அடுத்த பிரமாண்டம் 'உலகின் மிக உயர ராட்டினம்'

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய, மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

ஐன் துபாய்
ஐன் துபாய்
author img

By

Published : Aug 26, 2021, 2:05 PM IST

துபாய்: உலகிலேயே மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலீஃபா துபாயில் கட்டப்பட்டுள்ளது. இந்த வானளாவிய கட்டடத்தை சிகாகோவைச் சேர்ந்த ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் & மெர்லின் கட்டடக்கலை நிறுவனம் வடிவமைத்துள்ளது. புர்ஜ் கலீஃபா 2010ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்தக் கட்டடம் வணிக, குடியிருப்பு, விருந்தோம்பல் அறைகள் என மொத்தம் 162 தளங்களைக் கொண்டுள்ளது. மேகக்கூட்டங்கள் வரை ஓங்கி நிற்கும், இந்தக் கட்டடத்தின் உயரம் 2,717 அடியாகும் (828 மீ). இப்படிப்பட்ட சிறப்பை கொண்ட துபாயில் மேலும் ஒரு பொறியியல் பிரமாண்டம் சேர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய, மிக உயரமான ராட்டின சக்கரம் இங்கு கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஐன் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் 820 அடி (250 மீ). இதற்கு முன்னதாக, நிவாடாவின் லாஸ் வேகஸில் உள்ள 'ஹை ரோலர்' ராட்டினம் உலகின் மிக உயர ராட்டினமாக இருந்தது. இதன் உயரம் 550 அடி (167.6 மீ).

ஐன் துபாய்

இந்த ராட்டினம் துபாயின் ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ளது. இதற்காக 9,000 டன் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அளவு, லண்டனில் உள்ள ஈபிள் டவருக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புகளை விட 25 விழுக்காடு அதிகமாகும்.

இதில் ஏறினால் ஒரு முறை மேலே சென்று கீழ் வந்தடைய 38 நிமிடங்களில் ஆகும். சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு சுழற்சிக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளுக்கு என தனி கேபினும் உள்ளது. பிறந்தநாள், நிச்சயதார்த்தம், திருமணங்கள் உள்ளிட்டவை கொண்டாட இங்கு அறைகள் உள்ளன.

இது குறித்து, ஐன் துபாயின் தலைமை இயக்க அலுவலர் முகமது ஷரஃப் கூறுகையில், "பொறியியலில் புதிய உலகளாவிய உயரத்தை துபாய் அடைந்துள்ளது. துபாய் மீண்டும் ஒரு முக்கிய சர்வதேச சுற்றுலாத் தலமாக தன்னை நிரூப்பித்துள்ளது.

இந்த ராட்டினம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50ஆவது ஆண்டு கொண்ட விழாவில் இந்த ராட்டினம் திறக்கப்படுவது கூடுதல் சிறப்பு" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரேசிலில் 88 அடி உயர பிரமாண்ட ராட்டினம் - சுற்றுலாப் பயணிகள் வியப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.