Latest International News படைகளை திரும்பப்பெறுவது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டிருந்த அறிக்கையில், " ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ள நிலையில், வட மேற்கு சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுகிறோம்.
விரைவில் துருக்கிப் படையினர் அங்கு சென்று போரிடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், குர்து பேராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளைத் துருக்கி பார்த்துக் கொள்ளும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-துருக்கி அதிபர் ரிசப் தையிப் எர்டோன் இடையே ஞாயிறன்று நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐ.எஸ் மீதான இறுதிப் போரை தொடங்கியது சிரியா
பீதியில் குர்து போராளிகள்:
அமெரிக்காவின் இந்த திடீர் கொள்கை மாற்றம், குர்து பேராளிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் ஐஎஸ்ஐஸ் பயங்கரவாதிகளுடன் சண்டையிட அமெரிக்கப் படையினருக்குப் பெரிதும் உதவியவர்கள் குர்து பேராளிகள் ஆவர். ஆனால், துருக்கி நாட்டைப் பொறுத்தவரை, குர்து பேராளிகளும் பயங்கரவாதிகள் தான். வடமேற்கு சிரியாவில் துருக்கியின் தலையீடு என்பது தங்களுக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதே குர்துக்களின் அச்சமாக உள்ளது.
குர்து போராளிகள் மீது துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினால், துருக்கிப் பொருளாதாரத்தை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.