ETV Bharat / international

கரோனா:மத்திய கிழக்கு குழந்தைகளின் நலனுக்குக் கூடுதல் நிவாரணம் தர யுனிசெப் கோரிக்கை - கரோனா மத்திய கிழக்கு யூனிசெப்

ஆமான்: கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், போர் மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் குழந்தைகளின் நலனுக்காகக் கூடுதலாக 99.4 மில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்குமாறு உலக நாடுகளுக்கு யுனிசெப் கோரிக்கை விடுத்துள்ளது.

UNICEF appeals for more aid for mid-east kids, UNICEF AID, யூனிசெப் மத்திய கிழக்கு உதவி நிதி
UNICEF appeals for more aid for mid-east kids
author img

By

Published : Apr 21, 2020, 12:12 AM IST

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில், ஏற்கெனவே போர் மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் குழந்தைகளின் நிலைமை பேராபத்தில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் கூடுதலாக 99.4 மில்லியன் டாலரை (சுமார் 700 கோடி ரூபாய்) நிவாரண நிதி வழங்குமாறு யுனிசெப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிதியத்தின் மத்திய கிழக்குப் பிராந்தியத் தலைவர் டெட் சார்பான் கூறுகையில், "ஏமனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் உள்ள 50 விழுக்காடு சுகாதார மையங்கள் செயல்பாட்டில் இல்லை. 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாக உள்ளனர். இதில் நான்கு லட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு உதவி செல்லவில்லை என்றால், 50 விழுக்காடு குழந்தைகள் இறக்க நேரிடும். இதுபோன்ற இக்கட்டான சூழலில், கோவிட்-19 நோய்ப் பரவல் அபாயம் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும்" என்றார்.

ஏமனில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாடு காரணமாக நோய்த் தொற்று பரவி வரலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் நிழலாடுகிறது.

யுனிசெப் கேட்டுள்ள உதவி நிதியை வைத்து, இப்பிராந்தியத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் பல செயல்படுத்தப்படும் என சார்பான் கூறுகிறார்.

கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில், இப்பிராயத்தில் வாழும் 25 மில்லியன் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன.

இந்த நிலையில், தற்போது கரோனா பரவலைத் தடுக்க மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் 2.4 கோடி குழந்தைகளை ஏழ்மை வலையில் விழச்செய்யும் என யுனிசெப் அச்சம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : குரங்குகளை காக்கும் தடுப்பூசி, கரோனாவுக்கு பயன்படுமா என ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.