சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. போரின் உக்கிரத்தைth தாங்க முடியாமல் லட்சக்கணக்கான சிரியர்கள் துருக்கி, லெபனன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் துருக்கி-சிரியா இடையே கடந்த சில வாரங்களாகp பயங்கர மோதல் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுடனான துருக்கி எல்லைப் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கிவரும் சுமார் 36 லட்சம் சிரிய அகதிகளை, அங்கிருந்து வெளியேற்ற ஏதுவாக எல்லையைத் திறந்துவிட அந்நாட்டு அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அங்கிருந்த சிரியா அகதிகள் கிரேக்க நாட்டு எல்லைக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, நேற்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் கிரேக்க எல்லையில் உள்ள தடுப்பு வேளிகளைக் தாண்டி உள்ளே புக முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிரேக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். பதிலுக்கு சிரிய அகதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை வீசித் தாக்கினர். நீண்ட நேரம் நடந்த இந்த மோதலில், இரண்டு அகதிகள் காயமடைந்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதிகளை வெளியேற்றியதற்காக குரோசிய அரசு துருக்கியை விமர்சித்திருந்த நிலையில், அந்நாட்டு அதிபர் எர்டோகன் நாளை (திங்கள்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமான புருசெல்ஸுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தின் திட்டம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : சிஏஏ போராட்டத்தைத் தூண்டிய தம்பதியர் கைது!