ETV Bharat / international

போர்க்குற்றச்சாட்டு: ரஷ்யா மறுப்பு - SYRIA CIVIL WAR RUSSIIA WAR CRIME

மாஸ்கோ: சிரியாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐநா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

russia war crime
russia war crime
author img

By

Published : Mar 4, 2020, 7:08 AM IST

Updated : Mar 4, 2020, 8:01 AM IST

மத்திய கிழக்கு நாடான சிரியாவில், 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த இந்தப் போரில் சிரியா அரசு, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிவருகிறது.

இந்நிலையில், இந்தப் போர் குறித்து 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொண்ட ஐநா, சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா இரண்டு வான்வழித் தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அது போர்க்குற்றம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்குப் பதிலளித்த ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். போர் தொடர்பாக நம்பத்தகுந்த தரவுகளை எந்த ஆணையத்தாலும் சேகரிக்க முடியாது" என ஐநாவின் குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதையும் படிங்க : ஆஃப்கானிஸ்தான் அரசுப் படை மீது தலிபான் தாக்குதல் - பேச்சுவார்த்தை நடக்குமா ?

Last Updated : Mar 4, 2020, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.