ஈரான்-ஈராக் போர் தொடக்க நாளை நினைவுகூறும் விதமாக தொலைகாட்சி மூலம் ஈரான் மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி, "வளைகுடா மற்றும் ஹாமுஸ் நீரிணையில் பாதுகாப்பை கண்காணிக்க ஒத்துழைப்பு தர தயாராக உள்ள பிராந்திய நாடுகளுடன் நட்பு மற்றும் தோழமை பாராட்ட ஈரான் தயாரகவுள்ளது.
வளைகுடாவில் அந்நிய கக்திகளின் இருப்பு என்பது இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கு பாதகமாக அமையும்.
வளைகுடா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான திட்டத்தை ஐநாவில் சமர்பிக்கவுள்ளோம்" என்றார்.
ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சவுதி தாக்குதல் :
சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14ஆம் தேதி (சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எனினும், இத்தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே, ஈரான் அணுசக்தி பிரச்னையில் அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் நிலவிவரும் நிலையில், சவுதி எண்ணெய் தாக்குதலால் வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.