கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் சிரியா சின்னாபின்னமானது. இதன் உக்கிரத்தை தாங்க முடியாமல் லட்சக்கணக்கான மக்கள அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், சிரியாவில் கடுமையாக சேதமடைந்த பகுதிகளில், சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அமெரிக்க ஆதரவு சிரியா அரசு படை நடத்திய சமீபத்திய தாக்குதல் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.