இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம் 17ஆம் தேதி இஸ்ரேலில் மறுதேர்தல் நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முன்னாள் ராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களுடனும், பிரதமர் நெதன்யாகுவின் ஆளும் லிக்குட் கட்சி 32 இடங்களுடனும் முன்னிலையில் உள்ளன.
120 இருக்கைகளைக் கொண்ட இஸ்ரேலில் நாடாளுமன்றத்தில் (கெனசெட்) 61 இடங்களைப் பிடித்தால் ஆட்சி அமைக்கலாம். ஆனால், சிக்கலான இஸ்ரேல் அரசியல் களத்தில் கூட்டணி அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றன.
![Knesset, israel Knesset, கெனசட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4640344_knesset.jpg)
இந்தச் சூழலில், புதிய அரசு அமைவதற்கு முன்பாக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமர் அந்தர் பல்டி : கூட்டணியமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு