ETV Bharat / international

யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - இஸ்ரேல் - இஸ்ரேல் நாட்டின் அதிபர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஜெருசலேம்: யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்தி அணு ஆயுதங்களைத் தயாரிக்க ஈரானை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசி தெரிவித்துள்ளார்.

யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்த  ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - இஸ்ரேல்

author img

By

Published : Jan 5, 2021, 7:38 PM IST

ஈரானின் போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் ஈரான் அரசின் அணு உலையில் 20 விழுக்காடு யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியைத் தொடங்க அந்நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி உத்தரவிட்டுள்ளார்.

20% செறிவூட்டல் என்பது ஆயுத-தர மட்டங்களிலிருந்து மாறுபட்ட ஒரு குறுகிய, தொழில்நுட்ப படிநிலை முன்னேற்றம் என ஈரான் கருதினாலும் அதற்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. குறிப்பாக, ஈரானின் இந்த முடிவை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இஸ்ரேல் நாட்டின் அதிபர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளுக்கிடையே யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் அரசு தொடங்கியுள்ளதாக அணுசக்தி திட்டங்களைக் கண்காணித்துவரும் சர்வதேச அணுசக்தி நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காபி அஷ்கெனாசி இன்று (ஜன. 05) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஈரான் அதன் கடமைகளிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ஈரானின் நோக்கத்தை இதன்மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. 20% யுரேனியம் செறிவூட்டல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ள ஈரானின் முடிவிற்கு சர்வதேச நாடுகள் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும். ஈரானிடம் அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நான் பகிரங்க அழைப்புவிடுக்கிறேன். ஈரானின் அறிவிப்புக்கு உறுதியான மற்றும் உடனடி பதில் அளிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ர‌ஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை 2015ஆம் ஆண்டு ஈரான் செய்துகொண்டது.

அணு ஆற்றலுக்கு எரிபொருளாகப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 3.67 விழுக்காட்டுக்கு மேல் செறிவூட்டக் கூடாது என்றும் குறிப்பிட்ட அளவே அதனைக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்த  ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - இஸ்ரேல்
ஈரானின் போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை

இதனிடையே இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது எனக் கூறிய ட்ரம்ப், 2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார். அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியிலாகத் தொடர் மோதல் போக்கு நிலவிவருகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ள சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை மீண்டும் இணைய வைக்க ஈரான் மறைமுகமாக நெருக்கடி அளிக்கத் தொடங்கி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கரோனா 2.0: பிரிட்டனில் மீண்டும் முழு ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.