சீனா உள்ளிட்ட நாடுகளில் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, சீனாவில் மட்டும் இரண்டு ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அச்சம் தொற்றியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் கொவிட்-19 வைரஸ் காரணாக 12 பேர் உயிரிழந்ததாக நேற்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்த நிலையில், இன்று மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் மூதாட்டிகள் என அரசு ஊடகம் செய்து வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், அங்கு உயிரிழப்பு எண்ணிக்க 15 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை ஈரான் அரசு மூடி மறைப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இது ஈரானிய அரசின் வெளிப்படைத் தன்மை குறித்து மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : குமரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் முதியவர் அனுமதி?