பாலஸ்தீனத்தின் காஸா பகுதி தற்போது ஹாமாஸ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் அண்டை நாடான இஸ்ரேலுக்கு அவ்வப்போது மோதல் நடப்பது வழக்கம். இந்த மோதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிறு காலை ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் ஆதரவின் செயல்பட்டுவரும் இஸ்லாமிக் ஜிஹாத் என்ற பாலஸ்தீன இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜிஹாத் இயக்கத்தினர் இஸ்ரேலை நோக்கி 50-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவினர். இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் பாதுகாப்பு ஆயுதங்கள் தடுத்து நிறுத்தன.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தினர் போர் விமானம், ஹெலிகாப்பர்களைக் கொண்டு காஸாவில் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதல் திங்கள்கிழமையும் நீடித்தது.
பின்னர், மோதலை நிறுத்திக்கொண்டு சமரசமாகச் செல்ல இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதையடுத்து காஸா, அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அமைதி திரும்பியுள்ளது.
இதையும் படிங்க : கொரோனா: ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு