ரியோ டி ஜெனீரோ: நெஞ்சை பதை பதைக்க செய்யும் இச்சம்பவம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்துள்ளது.
அங்குள்ள நகர் ஒன்றின் அடுக்குமாடி குடியிருப்பில், 33 வயதான டயானா கிறிஸ்டினா ரோட்ரிகஸ் மசாடோ என்ற பெண் தனது கணவர் கிறிஸ்டினா ஸாவோ என்பவருடன் வசித்துவந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. மணமானது முதல் இருவரும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுவந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் காதலின் பரிசாக பிறந்துள்ளனர்.
எனினும் தம்பதியர் இருவரும் அடிக்கடி சண்டையிடுவதை மட்டும் நிறுத்தவில்லை. அது ஒரு பக்கம் ஜோராக நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்து முடியாத டயானா இரு ஆண்டுகளாக தனியாகவும் வாழ்ந்துவந்துள்ளார்.
இந்நிலையில் கோபித்துக்கொண்ட மனைவியை சமாதானம் செய்து, மறுபடியும் வீட்டுக்கு கூட்டிவந்து குடும்பம் நடத்தியுள்ளார் கிறிஸ்டினா. இதற்கிடையில் கடந்த வாரம் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது டயானாவை அவரது கணவர் கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில், தற்பாதுகாப்புக்காக டயானா கத்தியை எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே சண்டை தீவிரமாகவே, கணவரை கத்தியால் குத்திய டயானா, அவரின் அந்தரங்க உறுப்பை தனியாக வெட்டி எடுத்து, சட்டியில் போட்டு எண்ணெய் விட்டு வறுத்துள்ளார்.
இந்நிலையில் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, விரைந்துவந்த காவலர்கள் சைக்கோ மனைவியை கைதுசெய்தனர். தொடர்ந்து அங்கு உடல் முழுக்க காயங்களுடன் சிதைந்து கிடந்த கிறிஸ்டினா உடலையும் மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.