ETV Bharat / international

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்! - கொரோனா தடுப்பூசி

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

WHO approves emergency use of Sinopharm COVID vaccine, WHO approves emergency use of Sinopharm, WHO approves emergency use of China COVID vaccine, emergency use of China Sinopharm COVID vaccine, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல், சினோபார்ம் தடுப்பூசி, கோவிட் தடுப்பூசி, கரோனா தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி
சீன கொரோனா தடுப்பூசி சினோபார்ம்
author img

By

Published : May 8, 2021, 1:12 PM IST

ஜெனீவா (சுவிட்சர்லாந்து): சீனா தயாரித்த சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா நோய் கிருமி தொற்றை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு பெருந்தொற்றாக அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வந்ததால், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டது.

அதன் விளைவாக சில தடுப்பூசிகள் சோதனை முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டு, அவசர கால பயன்பாட்டிற்காக அதில் சிலவற்றிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. முதலில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் பைசர் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் அஸ்ட்ரா ஜெனகா- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கோவேக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அது இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, கோவிஷீல்ட் எனும் பெயரில் இங்கு பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இச்சூழலில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6ஆவது தடுப்பூசி இதுவாகும்.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 79 விழுக்காடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பிற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும். ஏற்கனவே 22 நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் வேளையில், உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.