இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளின் முதற்கட்ட ஆய்வில், தாயிடமிருந்து குழந்தைக்கு கோவிட்-19 பரவுவதற்கான அபாயம் சிசேரியன்தான் என்றும், அதனால் பிறந்தவுடனேயே தாயிடமிருந்து குழந்தையை தனிமைப்படுத்த வேண்டும் என வெளியிட்டிருந்தனர்.
ஆனால், தற்போதைய மறுஆய்வில் நாட்டிங்ஹாம் விஞ்ஞானிகள், 666 புதிதாகப் பிறந்த குழந்தைகளையும், 655 பெண்களையும் வைத்து சோதனை நடத்தினர்.
அதில், சுகப் பிரசவத்தில் பிரசவித்த பெண்கள் 292 பேரில் எட்டு பேரின் (2.7 விழுக்காடு) குழந்தைகளுக்கு மட்டுமே கரோனா தொற்று இருந்தது. ஆனால், அறுவைசிகிச்சை செய்த 364 பெண்களில், 20 (5.3 விழுக்காடு) குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவியிருந்தது என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது குறித்து நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் கேட் வாக்கர் கூறுகையில், "அதிகப்படியான குழந்தைகளுக்கு பரவிய கரோனா தொற்று, அறிகுறி அற்றவை. குழந்தை சுகப் பிரசவத்தில் பிறப்பதாலும், தாய்ப்பால் வழங்குவதாலும், பிறந்த உடனே தாயிடம் குழந்தை இருப்பதாலும், கரோனா தொற்று பரவும் விழுக்காடு மிகவும் குறைவு. கரோனா பாதித்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் கரோனா உறுதியாக வாய்ப்புகள் குறைவு. இச்சூழ்நிலையில், சுகப் பிரசவமும், தாய்ப்பால் வழங்குவதும் பாதுகாப்பானது என மக்களுக்கு வலியுறுத்துகிறோம்" என்றார்
இதையும் படிங்க:குழந்தைகளை பாதிக்கும் கோவிட்-19 குறித்து விளக்கும் புதிய ஆய்வு!