ETV Bharat / international

சீனாவிற்கு ஆதரவாக பதிவிட்ட ட்விட்டர் கணக்குகள் நீக்கம்! - சீனா ஆதரவு ட்விட்டர்

லண்டன்:சீனாவுக்கு ஆதரவான, தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

Twitter pro-Beijing narratives China-linked accounts spreading false news false news China communist rulers சீனா ட்விட்டர் கணகக்கு முடக்கம் சீனா ஆதரவு ட்விட்டர்
சீனா ட்விட்டர் கணகக்கு முடக்கம்
author img

By

Published : Jun 13, 2020, 10:07 PM IST

சீனா அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், கரோனா, ஹாங்காங் போராட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டன.

அதேபோல் 23 ஆயிரத்து 750 பிராதான ட்விட்டர் கணக்குகளும், அந்த கணக்குகளில் பதிவிடப்படும் ட்வீட்டுகளை ரீ ட்வீட் செய்யும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

23 ஆயிரத்து 750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்வீட்களின் உள்ளடக்கம் குறித்து பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலிய ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டிடியூட் (ASPI) மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் இணைய ஆய்வகம் கூறுகையில், முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் 78 விழுக்காடு கணக்குகளுக்கு பின்தொடர்பவர்களே இல்லை என்றும், பின் தொடர்பவர்கள் இருக்கும் ட்விட்டர் கணக்குகளில் 95 விழுக்காடு கணக்குகளுக்கு எட்டு பேருக்கு மேல் பின்தொடர்பவர்கள் இல்லை" எனக் கண்டறிந்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், சீன அரசாங்க ஆதரவு தொடர்பான ட்விட்டர் கணக்கை ட்விட்டர் முடக்கியது குறித்துப் பேசியுள்ளார். அப்போது, ட்விட்டர் போலித் தகவல்களைக் குறைக்க விரும்பினால், முதலில் சீனாவை அவதூறு செய்யும் ட்விட்டர் கணக்கை மூடவேண்டும் என்று கூறினார். தவறான தகவல்களுக்கு சீனாதான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பல தளங்களில் சீனாவைப் பற்றி தவறான புரிதல்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா தொடர்பான 1,152 கணக்குகளையும், துருக்கி அரசாங்கத்துடன் தொடர்புடைய குறைந்தது 7,340 கணக்குகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஃப்ளீட்ஸ்' வசதி இந்தியாவில் அறிமுகம் - ட்விட்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.